×

கொல்லங்கோடு அருகே வீடுகளுக்குள் தேங்கி நிற்கும் மழைநீர்

நித்திரவிளை: கொல்லங்கோடு அருகே அம்பலக்குளத்தில் மழை காலங்களில் வீடுகளில் தண்ணீர் புகுவது வாடிக்கையாக அதன்படி தற்போது பெய்து வரும் மழை காரணமாக இந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் தேங்கிய நிலையில் உள்ளது. இது தொடர்பாக அந்த பகுதியில் குடியிருக்கும் ரவீந்திரன் கூறியது: மழை பெய்யும் போது  கிராத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மழைநீர் இயற்கையான ஓடை  வழியாக பாய்ந்து அம்பலக்குளத்தில் வந்து அதன்பின் மதகுகள் வழியாக, நெய்யார் இடதுகரை கிளை கால்வாய்  சென்று அங்கிருந்து ஏவிஎம் கால்வாய் வழியாக  தாமிரபரணி ஆற்றில் சென்று  சேரும்.தற்போது மழைநீர் வடிந்து செல்லும் இயற்கையான வெள்ள ஓடைகளை பக்கத்து நில உரிமையாளர்கள் சுவர் அமைத்து தடுத்த காரணத்தாலும், அம்பலக்குளத்தில் உள்ள மதகுகள் மழைநீர் வெளியேற முடியாமல் அடைந்து கிடப்பதாலும்,  மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்து நின்று படிப்படியாக அதிகரித்து   வீடுகளுக்குள் மழைநீர்  தேங்கி நிற்கிறது. தற்போது இந்த பகுதியில் 15 வீடுகளில் மழைநீர் தேங்கியே நிற்கிறது. இதற்கு நிரந்த தீர்பு அம்பலக்குளத்தில் வந்து சேரும் மழைநீர் வெளியேறும் பகுதியில் அடைந்துள்ள  மதகுகளை சீரமைக்க வேண்டும். அப்போதுதான் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழாதவாறும்,   வீடுகளுக்குள் மழைநீர் தேங்காத நிலைக்கும் கொண்டு வர முடியும்.  ஆகவே மாவட்ட நிர்வாகம்   பொதுப்பணித்துறை  மூலம் இயற்கையான மழைநீர் வடிகால் மூலம்  அம்பலக்குளத்தில் மழைநீரை வரவைத்து,  குளத்தை  தூர்வாரி, மழைநீர் வெளியேறும் மதகுகளை சீரமைப்பு செய்து மழைநீர் வடிந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கூறினார்….

The post கொல்லங்கோடு அருகே வீடுகளுக்குள் தேங்கி நிற்கும் மழைநீர் appeared first on Dinakaran.

Tags : Kollangode ,Nithravilai ,Ambalakulam ,Dinakaran ,
× RELATED நிதி நிறுவனங்களில் போலி நகை அடகு வைத்து மோசடி மேலும் இருவர் ைகது