×

டப்மாஷ் நடிகை!

சமூக வலைத்தளங்களில் இருந்து சினிமாவுக்கு புதுமுகங்கள் இறக்குமதி செய்யப்படும் டிரெண்ட் உருவாகி வருகிறது. அவ்வகையில் டப்மாஷில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் மிருணாளினி, இப்போது சினிமாவில் பிஸி ஆகி இருக்கிறார். ஏற்கனவே ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஏலியனாக ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

‘ஜிகர்தண்டா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘வால்மீகி’யில் ஹீரோயினாகவே நடித்திருந்தார். இப்போது பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்.ஜி.ஆர் மகன்’ படத்திலும் இவர்தான் ஹீரோயின். இந்தப் படத்தில் ஏற்கனவே ஒப்பந்தமாகி இருந்த மலையாள நடிகை ஒருவர், கடைசி நிமிடத்தில் காலை வாரி விட்டதால் மிருணாளினிக்கு அடித்ததாம் ஜாக்பாட்.

Tags : Topmash ,actress ,
× RELATED அறிகுறி இன்றி கொரோனா குடும்பத்தோடு அட்மிட் ஆன நடிகை