×

ஒரே ஹீரோவின் இரு படங்கள் மோதல்

‘கோமாளி’ என்ற படத்தை இயக்கிவிட்டு, பிறகு ‘லவ் டுடே’, ‘டிராகன்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த பிரதீப் ரங்கநாதன், தற்போது ‘எல்ஐகே’ என்கிற ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் நடித்துள்ளார். வரும் அக்டோபர் 17ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு ரிலீசாகும் இதில், முக்கிய வேடங்களில் கிரித்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, கவுரி கிஷன், ஷாரா நடித்துள்ளனர். சிறப்பு வேடத்தில் சீமான் நடித்துள்ளார்.

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசை அமைத்துள்ளார். ரவுடி பிக்சர்ஸ் நயன்தாரா, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ்.லலித்குமார்‌ தயாரித்துள்ளனர். நிலமை இப்படியிருக்க, தெலுங்கு மற்றும் தமிழில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடித்துள்ள ‘ட்யூட்’ என்ற படமும் வரும் தீபாவளியன்று ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டதால் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

Tags : Pradeep Ranganathan ,Diwali festival ,Kriti Shetty ,S.J.Surya ,Yogi Babu ,Gowri Kishan ,Shara ,Seeman ,Ravi Varman ,Anirudh ,Rowdy Pictures ,Nayanthara ,Seven ,
× RELATED சண்டை போட தயாராகும் சமந்தா