×

திருவேற்காடு கோயிலுக்கு காணிக்கையாக வந்த 43 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு

சென்னை: திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலுக்கு காணிக்கையாக வந்த 42 கிலோ 991 கிராம் எடையுள்ள பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்று பொன் இனங்களை தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜு முன்னிலையில் அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து, இந்து அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கை: திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலுக்கு பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட பலமாற்று பொன் இனங்களிலிருந்து கற்கள், அழுக்கு, அரக்கு மற்றும் இதர உலோகங்களை நீக்கி, நிகர பொன்னினை கணக்கிடும் பணி ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜு முன்னிலையில் நடந்தது. அதன்படி, கோயிலுக்கு பயன்படுத்த இயலாத நிலையில் கிடைக்கப்பெற்ற பலமாற்று பொன் இனங்கள் மொத்த எடை 42990.900 கிராம் சுத்த தங்கமாக மாற்றி  தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜு முன்னிலையில் பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கும் வகையில் அதன் அம்பத்தூர் மண்டல மேலாளர் ராஜலட்சுமிடம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து, பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, கோயிலில் 108 சுமங்கலி பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையில் அமைச்சர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்….

The post திருவேற்காடு கோயிலுக்கு காணிக்கையாக வந்த 43 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு appeared first on Dinakaran.

Tags : Thiruvedu ,Chennai ,Devi Karumariamman ,Thiruvedu Temple ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்