×

இசை கலைஞனாக மாதவன்

மாதவன், அனுஷ்கா இணைந்து ரெண்டு படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் மூலம்தான் தமிழில் அறிமுகம் ஆனார் அனுஷ்கா. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மாதவனுடன் அவர் நடித்து வரும் படம், நிசப்தம். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திரைக்கு வர உள்ளது. இது வசனங்கள் இல்லாத படம். இதில் வாய் பேசாத காது கேளாத கேரக்டரில் அனுஷ்கா நடிக்கிறார்.

கதைப்படி அவர் ஓவியர். அவர் தோன்றும் பர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன் வெளியானது. இப்போது மாதவன் தோன்றும் மற்றொரு லுக் வெளியிடப்பட்டது. அதில் வயலின் வாசித்தபடி மாதவன் போஸ் தந்துள்ளார். படத்தில் அவர் இசைக்கலைஞனாக நடிக்கிறார். பார்வையற்றவராக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இது உருவாகிறது.

Tags : Madhavan ,music artist ,
× RELATED நீர்வழிப்பாதை தொடர்பாக வழக்கு தோப்பை...