×

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல பாப் பாடகி மரணம்

வாஷிங்டன்: பிரபல பாப் பாடகி மிமி பார்க்கர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.அமெரிக்காவின் மினசோட்டாவின் பெமிட்ஜ் பகுதியை சேர்ந்த பிரபல பாப் பாடகரும், டிரம்மருமான மிமி பார்க்கர் (55), கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்தார். தொடர் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது மறைவுக்கு பாப் இசைக்குழுவினரும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். லோ என்ற பெயரில் இண்டி ராக் இசைக்குழுவை அவரது கணவர் ஆலன் ஸ்பார்ஹாக் இணைந்து மிமி பார்க்கர் நடத்தி வந்தார். கடந்த 1994ல் லோ இசைக்குழுவின் சர்பில் ‘ஐ குட் லைவ் இன் ஹோப்’ என்று முதல் இசை ஆல்பம் வெளியானது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான இசை ஆல்பத்தை இந்த நிறுவனம் வெளியிட்டது. தனது இளம் வயதிலேயே, தனது சகோதரியுடன் சேர்ந்து பாடத் தொடங்கிய மிமி பார்க்கர், கிட்டார் வாசிக்க கற்றுக் கொண்டு கிராமியப் பாடல்களைப் பாடி பிரபலமடைந்தார். …

The post புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல பாப் பாடகி மரணம் appeared first on Dinakaran.

Tags : Washington ,Mimi Parker ,
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...