×

டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் டென்னிஸ் பைனலில் கார்சியாவுடன் சபலென்கா மோதல்: ஸ்வியாடெக், சாக்கரி ஏமாற்றம்

ஃபோர்ட் வொர்த்: டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அரினா சபலென்கா (பெலாரஸ்) – கரோலின் கார்சியா (பிரான்ஸ்) மோதுகின்றனர். ஆண்டு இறுதி தரவரிசையில் டாப் 8 இடங்களைப் பிடித்த வீராங்கனைகள் மோதும் இந்த தொடரின் லீக் சுற்றில், நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து), மரியா சாக்கரி (5வது ரேங்க், கிரீஸ்) இருவரும் ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல் அரையிறுதிக்கு முன்னேறி இருந்தனர். இந்த நிலையில், பரபரப்பான முதல் அரையிறுதியில்  சபலென்காவுடன் (7வது ரேங்க்) மோதிய ஸ்வியாடெக் 2-6, 6-2, 1-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவினார். 2 மணி, 7 நிமிடத்துக்கு நீடித்த இப்போட்டியில் அபாரமாக வென்ற சபலென்கா பைனலுக்கு முன்னேறினார். நடப்பு சீசனில் ஸ்வியாடெக்குடன் 5வது முறையாக மோதிய அவர் முதல் முறையாக வெற்றியை ருசித்தார். மற்றொரு அரையிறுதியில் மரியா சாக்கரியின் (கிரீஸ், 5வது ரேங்க்) சவாலை எதிர்கொண்ட கரோலின் கார்சியா (6வது ரேங்க்) 6-3, 6-2 என்ற  நேர் செட்களில்  வென்று பைனலுக்கு தகுதி பெற்றார். இப்போட்டி 1 மணி, 15 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. இன்று நடைபெறும் பைனலில் சபலென்கா – கார்சியா மோதுகின்றனர். இருவரும் முதல்முறையாக டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. 2019ல் சபலென்கா லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில், 2016ல் கார்சியா  அரையிறுதியில் தோல்வியைத் தழுவினார்….

The post டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் டென்னிஸ் பைனலில் கார்சியாவுடன் சபலென்கா மோதல்: ஸ்வியாடெக், சாக்கரி ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Sabalenka ,Garcia ,WTA Finals ,Sviatek ,Zachary ,Fort Worth ,Aryna Sabalenka ,Belarus ,Caroline Garcia ,Dinakaran ,
× RELATED சபலெங்கா முன்னேற்றம்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ரைபாகினா