×

வெற்றிமாறனுடன் இணையும் சூர்யா

அசுரன் படத்துக்கு பிறகு சூரியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார் வெற்றி மாறன். இது குறுகிய கால தயாரிப்பாக உருவாகிறது. அதன் பின்னர் சூர்யா நடிப்பில் ஒரு படத்தை அவர் இயக்க பேச்சு நடக்கிறது.

காப்பான் படத்துக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் சூர்யா நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பை அவர் முடித்துவிட்டார். அடுத்த ஆண்டு ஹரி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அதில் நடித்தபடியே வெற்றிமாறன் படத்திலும் அவர் நடிப்பார் என தெரிகிறது.

Tags : Surya ,Victorymaran ,
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்