×

திருவட்டார் அருகே சாலையோரம் பெட்டி பெட்டியாக கிடந்த காலாவதி உணவு பொருட்கள்-மீண்டும் கொட்ட வந்த வாகனம் சிறைபிடிப்பு

குலசேகரம் :  திருவட்டார்  அருகே வேர்கிளம்பி, விராலிக்காட்டுவிளை பகுதியில்  காலாவதியான சாக்லெட்,  குளிர்பானம் உள்பட பேக்கரி பொருட்களை ஏற்றிக் கொண்டு ஒரு டெம்போ அந்த  பகுதியில் வலம் வந்தது. பின்னர் காலாவதி பொருட்களை சாலையோரம் கொட்டி  சென்றுள்ளது.இதை அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள் தங்களது வீடுகளுக்கு  பெட்டி, பெட்டியாக தூக்கி சென்றனர். இது குறித்து கண்ணனூர் ஊராட்சி தலைவர்  ரெஜினி விஜிலாபாய்க்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு ஊராட்சி  தலைவர், முன்னாள் தலைவர் ராஜ், வார்டு உறுப்பினர்கள் ஜெயா, அனிதா ஆகியோர்  விரைந்து சென்றனர். பொதுமக்களும் அந்த பகுதியில் திரண்டனர். இந்த  நிலையில்  மீண்டும் கழிவுகள் ஏற்றி கொண்டு ஒரு டெம்போ அங்கு வந்துள்ளது.  உடனே அந்த வாகனத்தை அவர்கள் சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும்  திருவட்டார் காவல் துறையினர், கிராம நிர்வாக அலுவலர், சுகாதார ஆய்வாளர்,  உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் அங்கு சென்றனர். இதனையடுத்து  வாகனத்தின் உரிமையாளர் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. தொடர்ந்து 2  வாகனங்களுக்கும் மொத்தம்  ₹2 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டது.  தொடர்ந்து சாலையோரம் கொட்டப்பட்ட பொருட்கள் மீண்டும் வாகனத்தில்  ஏற்றப்பட்டது. பின்னர் 2 டெம்போக்களில் உள்ள பொருட்களையும் ஊராட்சி  பணியாளர்கள் முன்னிலையில் தரம் பிரித்து அழிப்பதாக எழுத்துபூர்வமாக  உறுதியளித்தனர்….

The post திருவட்டார் அருகே சாலையோரம் பெட்டி பெட்டியாக கிடந்த காலாவதி உணவு பொருட்கள்-மீண்டும் கொட்ட வந்த வாகனம் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvattar ,Werklampi ,Thiruvatar ,Viralikattuvilai ,
× RELATED குமரியில் பரளியாற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு