×

எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த்சாமி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தலைவி பெயரில் உருவாகிறது. ஜெயலலிதா வேடத்தை கங்கனா ரனாவத் ஏற்றிருக்கிறார். ஏ.எல்.விஜய் டைரக்டு செய்கிறார். டைரக்டர் ராஜமவுலி தந்தையும், பாகுபலி படத்தின் திரைக்கதை அமைப்பாளருமான விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதுகிறார்.

இப்படத்திற்காக கங்கனா ரனாவத் பரத நாட்டியம் கற்று வருகிறார். சமீபத்தில் அமெரிக்காவில் ஜெயலலிதா முக தோற்றத்துக்கு ஏற்ப கங்கனா தோற்றதையும் வடிவமைப்பதற்கான மேக் அப் டெஸ்ட் நடத்தப்பட்டது.

ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிக்க யாரை தேர்வு செய்யலாம் என்று பட தரப்பு ஆலோசித்து வந்தது. அப்போது அரவிந்த் சாமி பொருத்தமாக இருப்பார் என்று பேசப்பட்டது. தற்போது அது உறுதியாகி இருக்கிறது. எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்க உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகிறது.

Tags : Aravindsamy ,MGR ,
× RELATED எம்ஜிஆர் நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற பெண் உட்பட 5 பேர் கைது