×

தமிழுக்கு வரும் பிரியங்கா

கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்துள்ள பிரியங்கா அருள் மோகன், தமிழில் முதல்முறையாக அறிமுகம் ஆகிறார். கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர் நெல்சன். அவர் அடுத்து இயக்க உள்ள படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க உள்ளார்.

இப்பட ஷூட்டிங் ஜனவரியில் தொடங்குகிறது. இதில் நடிக்க தமிழ் பெண்ணுக்கான சாயலில் இருக்கும் புதுமுக நடிகையை தேடி வந்தனர். இந்நிலையில் படக்குழு சிபாரிசின் பேரில் பிரியங்கா அருள் மோகனை தேர்வு செய்துள்ளனர்.

Tags : Priyanka ,
× RELATED நியூசிலாந்தில் அமைச்சராகும் முதல்...