×

நேர ஒதுக்கீடு டிக்கெட் வாங்கினால் ஒன்றரை மணி நேரத்தில் ஏழுமலையான் தரிசனம்: தினமும் 20 ஆயிரம் விநியோகம்

திருமலை: நேர ஒதுக்கீட்டு டிக்கெட்டை வாங்கினால், திருப்பதி ஏழுமலையானை ஒன்றரை மணி நேரத்தில் தரிசிக்கலாம். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க, நேர ஒதுக்கீடு டிக்கெட் முறை மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த டிக்கெட்டுகள் திருப்பதி பஸ் நிலையம் எதிரே உள்ள சீனிவாஸ் காம்ப்ளக்ஸ், ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள கோவிந்தராஜ் சத்திரம், அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் தினமும் நள்ளிரவு 12 மணி முதல் தினமும் 20 ஆயிரம் டிக்கெட் வழங்கப்படுகிறது. இதை வாங்குபவர்கள், குறிப்பிட்ட நேரத்தில் சுவாமியை தரிசிக்கலாம். ஆனால், இதை அறியாதவர்கள் திருமலைக்கு வந்து பல மணி நேரம் காத்திருக்கின்றனர். சனிக்கிழமையான நேற்று முன்தினமும், ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் விடுமுறை என்பதால் அதிகளவில் பக்தர்கள் குவிந்துள்ளனர். இவர்கள் வைகுண்டம் வளாகத்தின் 31 அறைகளும் நிரம்பி, எஸ்எஸ்டி பகுதி வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுவாமியை தரிசிக்க 30 மணி நேரமாகிறது. நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களும், ரூ.300 டிக்கெட் பக்தர்களும் ஒன்றரை மணி நேரத்தில் தரிசனத்தை முடிக்கின்றனர். இது பற்றி தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா ரெட்டி நேற்று அளித்த பேட்டியில், ‘நள்ளிரவு முதல் விடிய விடிய நேர ஒதுக்கீடு டிக்கெட் வழங்கப்படுகிறது. ஆனால், பக்தர்கள் இந்த டிக்கெட்டை பெறாமல் திருமலைக்கு வருகின்றனர். இந்த டிக்கெட் பெற்றால் ஒன்றரை மணி நேரத்தில் தரிசித்து விடலாம். எனவே, பக்தர்கள் நேர ஒதுக்கீடு டிக்கெட் வாங்கி வந்தால் யாருக்கும் சிரமம் இருக்காது,’ என தெரிவித்தார்….

The post நேர ஒதுக்கீடு டிக்கெட் வாங்கினால் ஒன்றரை மணி நேரத்தில் ஏழுமலையான் தரிசனம்: தினமும் 20 ஆயிரம் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Tirumalai ,Tirupati Ethumalayan ,Tirupati ,Edemalayan Temple ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப். மாதத்தில் ரூ.101 கோடி உண்டியல் காணிக்கை..!!