×

2 பாகமாக உருவாகும் பொன்னியின் செல்வன்

தனது கனவுப் படமான பொன்னியின் செல்வன் பட ஷூட்டிங்கை டிசம்பரில் துவங்க இருக்கிறார் மணிரத்னம். அமிதாப் பச்சன், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், மோகன்பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தை 2 பாகமாக உருவாக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம். படத்தின் ஸ்கிரிப்ட் உருவாக்கும் பணி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே படத்துக்கான லொகேஷன் தேர்விலும் படக்குழு மும்முரமாக உள்ளது. தாய்லாந்து காடுகளில் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் படத்துக்கு பிரமாண்ட செட் போடவும் வேலைகள் ஜரூராக நடக்கிறது.

Tags : Bonnie Selvan ,
× RELATED இசையமைப்பில் மீண்டும் பிஸியான ஷ்ருதி ஹாசன்.!