×

வெங்காயம் சாப்பிடாத மாப்பிள்ளை தேடும் நடிகை

பிரபுதேவா நடித்த சார்ளி சாப்ளின் 2 படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் அதா சர்மா. இந்தி, தெலுங்கு படங்களில் நடிப்பதுடன் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். தற்போதைக்கு கமாண்டோ 3, பைபாஸ் ரோட், மேன் டு மேன் என 3 இந்தி படங்களில் நடித்து வருகிறார். திடீரென்று தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு வரவேண்டிய மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கண்டிஷன் போட்டிருக்கிறார்.

வெங்காயம் சாப்பிடாதவராக இருக்க வேண்டும். சாதி, நிறம், மதம், ஷூ சைஸ், நீந்தும் தகுதி, தோள்பட்டை அளவு, இன்ஸ்டாகிராமில் எவ்வளவு பேர் பின்தொடர்கிறார்கள், ஜாதக பொருத்தம் எதுவும் கணக்கில்லை. ஆனால் 3 வேளையும் சிரித்த முகத்துடன் முகம்சுழிக்காமல் சமையல் செய்பவராக இருக்க வேண்டும், தினமும் ஷேவ் செய்பவராக இருக்க வேண்டும்.

இந்திய பாரம்பரிய உடைகள் மட்டுமே அணிய வேண்டும். தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வீட்டிலோ, வெளியிலோ மது அருந்தக்கூடாது, இந்திய மொழிகளில் உள்ள அனைத்து மொழிப் படங்களையும் மதிக்க வேண்டும்.

அத்துடன் சந்தோஷத்துடன் பார்க்க வேண்டும் என நீண்டதொரு பட்டியலை கண்டிஷனாக வித்திருக்கிறார். அதா சர்மா திடீரென்று மாப்பிள்ளை தேடுவது எதற்கு? என்று கேட்டிருக்கும் ரசிகர்கள் தற்போது வெங்காய விலை உயர்ந்து வருவதை நக்கலடிக்க இப்படியொரு பதிவை வெளியிட்டிருக்கிறாரா என்றும் கலாய்த்திருக்கின்றனர்.

Tags : Actress ,groom ,
× RELATED விவசாயிகளுக்கு நிலம் வழங்கிய நடிகை