×

டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் அரையிறுதியில் சபலென்கா, சாக்கரி

ஃபோர்ட் வொர்த்: டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட மரியா சாக்கரி (கிரீஸ்), அரினா சபலென்கா (பெலாரஸ்) தகுதி பெற்றனர். நான்சி ரிச்சி ஒற்றையர் பிரிவு கடைசி சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன. அதில் ஆன்ஸ் ஜெபருடன் (துனிசியா, 2வது ரேங்க்) மோதிய சாக்கரி (5வது ரேங்க்) 6-2, 6-3 என நேர் செட்களில்  ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்தி அசத்தினார். இப்போட்டி 1 மணி, 8 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. லீக் சுற்றில் 3 ஆட்டங்களிலும் வென்ற சாக்கரி தொடர்ந்து 2வது முறையாக இத்தொடரின் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். ஆன்ஸ் ஜெபர் லீக் சுற்றுடன் வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில்  ஜெசிகா பெகுலாவுடன் (அமெரிக்கா, 3வது ரேங்க்) மோதிய சபலென்கா (7வது ரேங்க்) 6-3, 7-5 என்ற நேர் செட்களில் வீழ்த்தி, இந்த பிரிவில் 2 வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 30 நிமிடத்துக்கு நீடித்தது….

The post டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் அரையிறுதியில் சபலென்கா, சாக்கரி appeared first on Dinakaran.

Tags : Sabalenka ,Zachary ,WTA Finals tennis ,Fort Worth ,Maria Zachary ,Greece ,Arina Sabalenka ,WTA Finals tennis series ,Dinakaran ,
× RELATED சபலெங்கா முன்னேற்றம்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ரைபாகினா