×

கோவையில் ஐஎஸ் தீவிரவாத ஆதரவு வாலிபர்கள் சிக்கினர்: உளவியல் ஆலோசனை வழங்க திட்டம்

கோவை: கோவை மாநகரில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவான 60க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த 23ம் தேதி கார் வெடிப்பில் ஜமேஷா முபின் (23) பலியானார். கோவை மாநகர தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி சதித்திட்டம் தீட்டியதாக ஜமேஷா முபினின் உறவினர்கள் முகமது அசாருதீன், அப்சர்கான் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தற்போது என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, போலீசார் நடத்திய விசாரணையின் படி, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் ஈடுபாடு கொண்ட நபர்கள் குறித்த பட்டியலை போலீசார் திரட்டினர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாநகரில் கார் வெடிப்பு தினத்தில் இருந்து தீவிர பாதுகாப்பு மற்றும் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தற்போது வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உயர் அதிகாரிகளின் உத்தரவு படி, உளவுத்துறை போலீசார் தீவிரமாக பலரை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், கோவை மாநகரில் ஐ.எஸ். அமைப்பின் மீது ஆதரவு கொண்ட  60க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஐ.எஸ். தீவிரவாத கருத்தால் ஈர்க்கப்பட்ட அவர்களது பட்டியலை தயார் செய்து வைத்துள்ளோம். அவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க முயற்சி செய்து வருகிறோம். மேலும், மருத்துவ குழு சார்பில், அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும், உலமாக்கள் மூலம் நல்ல போதனைகளை வழங்கவும் திட்டமிட்டு வருகிறோம். அவர்களை நல்வழிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.* ஏற்கனவே கைதான ஆம்பூர் மாணவன் வீட்டில் சோதனைதிருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நீலிக்கொல்லையை சேர்ந்தவர் மீர் அனாஸ் அலி(22). இவர் தனியார் பொறியியல் கல்லூரில் 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஜூலை 30ம் தேதி இவரது வீட்டில் மத்திய உளவு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது மீர் அனாஸ் அலி தனது லேப்டாப்பை உடைத்ததாக தெரிகிறது. உளவுதுறையினர் அந்த லேப்டாப் மற்றும் அவரது இரு செல்போன்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக மீர் அனாஸ் அலி செயல்பட்டு வந்ததும், வெளிநாட்டு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தததும் தெரியவந்தது. இதைதொடர்ந்து அவரை ஆம்பூர் டவுன் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று ஆம்பூரில் உள்ள அனாஸ் அலி வீட்டிற்கு திருப்பத்தூர் மாவட்ட ஏடிஎஸ்பி புஷ்பராஜ் தலைமையிலான போலீசார் வந்து சோதனை செய்தனர். வீட்டில் இருந்த பென் டிரைவ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆய்வுக்காக போலீசார் பறிமுதல் செய்தனர்….

The post கோவையில் ஐஎஸ் தீவிரவாத ஆதரவு வாலிபர்கள் சிக்கினர்: உளவியல் ஆலோசனை வழங்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Cova ,Valipers ,Govai ,Covai City S.S. ,Dinakaran ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!