×

இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.46.5 லட்சம் தங்க சுருள் கம்பி பறிமுதல்; வாலிபர் கைது

மீனம்பாக்கம்: இலங்கையில் இருந்து நேற்று நள்ளிரவில் சென்னைக்கு கடத்தி வந்த ரூ.46.5 லட்சம் மதிப்பிலான தங்க சுருள் கம்பிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இலங்கை பயணி கைது செய்யப்பட்டார். இலங்கையின் தலைநகர் கொழும்புவில் இருந்து நேற்று நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு லங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இலங்கையை சேர்ந்த வாலிபர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பேசினார்.இதைத் தொடர்ந்து அவரை தனியறைக்கு அழைத்து சென்று, அவரது உடைமைகளை முழுமையாக சோதித்தனர். மேலும், அவர் கொண்டு வந்திருந்த டிராலி டைப் சூட்கேஸ்மீது சந்தேகம் ஏற்பட்டது. அதன் பக்கவாட்டில் அமைந்திருந்த ரப்பர் பகுதியை ரித்து பார்த்ததனர். அதற்குள் ரூ.46.5 லட்சம் மதிப்பில் 38 கிராம் எடையிலான தங்க சுருள் கம்பிகள் மறைத்து கடத்தி வரப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தது வாலிபரை கைது செய்தனர். அவர் சர்வதேச கடத்தல் கும்பலோடு தொடர்பு உடையவரா அல்லது இங்கு யாருக்கேனும் குருவியாக தங்கம் கடத்தி வந்தாரா என சுங்கத்துறை அதிகாரிகள் கிடுக்கிபிடியாக விசாரித்து வருகின்றனர்….

The post இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.46.5 லட்சம் தங்க சுருள் கம்பி பறிமுதல்; வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sri Lanka ,Meenambakkam ,Customs Department ,Dinakaran ,
× RELATED சென்னை-இலங்கை இடையே ஒரே நாளில் 4 விமான சேவைகள் திடீர் ரத்து