×

சென்னை-இலங்கை இடையே ஒரே நாளில் 4 விமான சேவைகள் திடீர் ரத்து

மீனம்பாக்கம்: இலங்கையின் தலைநகர் கொழும்பில் நாள்தோறும் நள்ளிரவு 2 மணியளவில் பயணிகளுடன் லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு, அதிகாலை 3 மணியளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து சேரும். பின்னர் இங்கிருந்து மீண்டும் அதிகாலை 4 மணியளவில் சென்னையில் இருந்து பயணிகளுடன் லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இலங்கைக்கு புறப்பட்டு செல்லும். பின்னர், அதே நாள் மாலை 3 மணியளவில் கொழும்பில் இருந்து சென்னை வரும் விமானம், மீண்டும் மாலை 4 மணியளவில் இலங்கைக்கு பயணிகளுடன் புறப்பட்டு செல்வது வழக்கம். இதேபோல் சென்னையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்படும் லங்கன் ஏர்லைன்சின் 2 புறப்பாடு விமானங்கள், இலங்கையில் இருந்து சென்னைக்கு 2 வருகை விமானங்கள் என நாளொன்றுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்சின் 4 விமான சேவைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், இன்று ஒரே நாளில் லங்கன் ஏர்லைன்சின் சென்னை-இலங்கை-சென்னை இடையிலான 4 விமான சேவைகளும் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளன. இவ்விமானங்களில் இலங்கை பயணிகள் மட்டுமின்றி, அதன் வழியே மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் டிரான்சிஸ்ட் பயணிகளும் உள்ளனர். இதற்கிடையே, இன்று லங்கன் ஏர்லைன்சின் வருகை, புறப்பாடு என மொத்தம் 4 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால், அவ்விமானங்களில் வந்து, செல்லவேண்டிய ஏராளமான பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்த 4 விமான சேவைகளும் நிர்வாக காரணங்களுக்காக இன்று ஒரே நாளில் திடீரென ரத்து செய்யப்பட்டதாக ஏர்லைன்ஸ் வட்டாரத்தில் தகவல் கூறப்படுகிறது. இதனால் லங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களில் செல்ல வேண்டிய மாற்று விமானங்களில் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

The post சென்னை-இலங்கை இடையே ஒரே நாளில் 4 விமான சேவைகள் திடீர் ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sri Lanka ,Meenambakkam ,Lankan Airlines ,Colombo ,Chennai International Airport ,Dinakaran ,
× RELATED இலங்கை அத்துமீறலுக்கு முடிவுகட்ட வேண்டும்: அன்புமணி