×

ரூ. 37.66 கோடி மதிப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான விடுதிகள், பள்ளி கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்காக ரூ. 37.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிகள் மற்றும் பள்ளிக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதுகலை கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டிடம், திருவள்ளூர் தேர்வாயில் 3 கோடியே70 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய செலவிலும், காஞ்சிபுரம் மௌலிவாக்கத்தில் 3 கோடியே 44 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் செலவிலும், ஈஞ்சம்பாக்கத்தில் 1 கோடியே 74 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவிலும், மயிலாடுதுறை கொண்டலில் 1 கோடியே 62 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் செலவிலும், 916 மாணவர்கள் மற்றும் 839 மாணவிகள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள 4 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கான வகுப்பறைக் கட்டிடங்கள், அறிவியல் மற்றும் கணினி ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள்,செங்கல்பட்டு குமிழியில் 12 கோடிரூபாய் செலவிலும், நீலகிரி மு. பாலாடாவில் 2 கோடியே 77 இலட்சம் ரூபாய் செலவிலும், நாமக்கல் செங்கரையில் 2 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவிலும் ஒரு பள்ளியில் 480 மாணவர்கள் பயிலும் வகையில் கட்டப்பட்டுள்ள 3 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கான கட்டிடங்கள்; என மொத்தம் 37 கோடியே 66 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக் கட்டடங்களைமுதலமைச்சர் திறந்து வைத்தார்.மேலும், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பயன்பெறும் பொருட்டு அம்மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தாட்கோ அலுவலகங்களை திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கென தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினிப் பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 197 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.பின்னர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கு ஐஐடி மூலம் B.S. Data Science & Applications எச்.சி.எல் நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு பயில பயிற்சி தொகை, Indian Health Care மூலம் Medical Coding பயிற்சி, ஓட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்ட்யூட் மூலம் B.Sc., மற்றும் Diploma in Food Production, Craftsman Ship ஆகிய வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சிக்கு தேர்வாகியுள்ள 130 மாணவ, மாணவியர்களுக்கு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 9 மாணவ, மாணவியர்களுக்கு ஆணைகளை முதல்வர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மதிவாணன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர் உள்பட பலர் பங்கேற்றனர். …

The post ரூ. 37.66 கோடி மதிப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான விடுதிகள், பள்ளி கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Adiravidar ,CM G.K. Stalin ,Chennai ,Aadhravidar ,Dinakaran ,
× RELATED வேங்கைவயல் விவகாரம்:...