சென்னை : கடந்த 3 நாட்களாக மழை பாதிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமி எங்கேயும் சென்று ஆய்வு செய்யாதது ஏன் என அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை திரு.வி.க நகர் மண்டலத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மேயர் பிரியா, தாயகம் கவி எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தமக்கு நினைவு தெரிந்த காலம் முதல் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் தற்போது வெள்ளம் தேங்கி நிற்கவில்லை என தெரிவித்தார். தென்சென்னை பகுதிகளில் எந்த பாதிப்பும் ஏற்படாதது மகிழ்ச்சியை தருவதாகவும், திரு.வி.க. நகரில் தேங்கி இருந்த தண்ணீர் 95% அகற்றப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார். வடசென்னை பகுதியில் 1 லட்சம் அளவுள்ள மின்மோட்டார்கள் கொண்ட தண்ணீர் வெளியேற்றப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உணவு வழங்கப்படும் என்றும், மருத்துவ முகம் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். …
The post கடந்த 3 நாட்களாக மழை பாதிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமி எங்கேயும் சென்று ஆய்வு செய்யாதது ஏன்?: ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு கேள்வி..! appeared first on Dinakaran.
