×

வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு அனைத்து தீயணைப்பு வீரர்களும் களத்தில் இறங்க தயார்: டி.ஜி.பி., பி.கே.ரவி

ராமநாதபுரம்: வடகிழக்கு பருவமழை தீவிரமாகி உள்ள நிலையில் வெள்ளம் பதித்த பகுதிகளில் தமிழ்நாடு முழுவதும் அரசு நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. இதனால், தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீர் உடனடியாக வெளியேற்றப்படுவதால் மழை பாதிப்புகள் வெகுவாக குறைந்துள்ளன. ராமநாதபுரத்தில் பெய்த கனமழையால் பேருந்து நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த இடங்களை மாவட்ட ஆட்சியர் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டு வெள்ளநீரை உடனடியாக வெளியேற்றும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனையடுத்து தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீர் உடனடியாக அப்புறபடுத்தப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் அனைத்து தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளதாக மாநில தீயணைப்பு துறை டிஜிபி பி.கே.ரவி தெரிவித்துள்ளார். கடலூர் தீயணைப்பு அலுவலகத்தில் ஆய்வு செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் வடகிழக்கு பருவமழை முடியும் வரை தீயணைப்பு படையினர் விடுமுறை எடுக்க வேண்டாம் என்று என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.     திண்டிவனத்தில் வடகிழக்கு பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மரக்காணம் சாலையில் வெள்ளம் வடிகால் கால்வாய்களில் மழைநீர் தேங்கி நின்றதால் நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தியை கடிந்து கொண்டார். 17-வது வார்டில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார். மேலும், அப்பகுதிகளில் சுற்றி திரியும் தெரு நாய்களை பிடிக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.  …

The post வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு அனைத்து தீயணைப்பு வீரர்களும் களத்தில் இறங்க தயார்: டி.ஜி.பி., பி.கே.ரவி appeared first on Dinakaran.

Tags : Northeast ,P. K.K. Ravi ,Ramanathapuram ,government ,Tamil Nadu ,D.C. ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே...