×

நடிகைகள் குறித்து அவதூறு கருத்து சைதை சாதிக் மீது 5 பிரிவுகளில் வழக்கு

சென்னை: நடிகைகள் குறித்து அவதூறு கருத்து கூறிய விவகாரத்தில் சைதை சாதிக் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆர்.கே.நகரில் நடந்த கூட்டம் ஒன்றில் சைதை சாதிக் நடிகைகள் குறித்து அவதூறு கருத்து கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பாஜ பெண் நிர்வாகி நதியா சீனிவாசன் கடந்த வாரம் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பொதுகூட்டம் ஒன்றில் சைதை சாதிக் நடிகைகள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், சைதை சாதிக் மீது ஐபிசி 153, 294(பி), 5.5(1)(பி), 509 மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

The post நடிகைகள் குறித்து அவதூறு கருத்து சைதை சாதிக் மீது 5 பிரிவுகளில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Saidi Sadiq ,Chennai ,Central Crime Branch ,Saidai Sadiq ,
× RELATED தடை செய்யப்பட்ட ‘ஹிஸ்ப் உத் தஹ்ரீர்’...