×

ஈக்வடாரில் சிறையை முற்றுகையிட்டு குண்டு தாக்குதல்: சமூக விரோதிகளின் வன்முறையில் 5 காவலர்கள் உயிரிழப்பு…!

க்வீடோ: கைதிகள் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற வன்முறையில் 5 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டது ஈக்வடார் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குவாயாகுயில் பகுதியில் உள்ள சிறையில் இரு பிரிவு கைதிகளிடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த 200க்கும் மேற்பட்ட கைதிகளை பல்வேறு சிறைகளுக்கு மாற்ற ஈக்வடார் அரசு திட்டமிட்டது. இதன் படி பல்வேறு கட்டங்களாக கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக விரோதிகள் கும்பல் ஒன்று குவாயாகுயில் சிறையை முற்றுகையிட்டு திடீர் தாக்குதலில் ஈடுபட்டது. சிறை அருகே சுமார் 6 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. காவல்துறையினரின் ரோந்து வாகனங்கள் மீதும் சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களில் காவல் அதிகாரிகள் 5 பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த 15 போலீஸ் மற்றும் சிறைத்துறை காவலர்கள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக சிறை மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறைக்குள் பிணை கைதிகளாக சிறைபிடிக்கப்பட்ட 7 காவல் அதிகாரிகள் அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டனர். சமூக விரோதிகளின் தாக்குதல்களை தடுக்கும் விதமாக குவாயாகுயில் சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. …

The post ஈக்வடாரில் சிறையை முற்றுகையிட்டு குண்டு தாக்குதல்: சமூக விரோதிகளின் வன்முறையில் 5 காவலர்கள் உயிரிழப்பு…! appeared first on Dinakaran.

Tags : Ecuador ,prison siege and bomb attack ,Quito ,Ecuador.… ,Dinakaran ,
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...