×
Saravana Stores

வணிகவரி மற்றும் பதிவுத்துறைக்கு ரூ.86,566 கோடி வருவாய் கிடைத்துள்ளது: வருவாய் அதிகரிப்பு என அமைச்சர் தகவல்

சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் இந்தாண்டு ரூ.86,566 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி வளாக கூட்டரங்கில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் வணிகவரி இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்தான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி மற்றும் வணிகவரி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலாளர் மனோஜ் குமார் உள்ளிட்ட துறை சார்ந்த  உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து அமைச்சர் பி.மூர்த்தி நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் இந்தாண்டு மொத்தமாக ரூ.86,566 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அதன்படி, வணிகவரித்துறையில் கடந்த மாதம் மட்டும் ரூ.10,678 கோடியும், ஏப்ரல் முதல் அக்.31ம் தேதி வரை 76,839 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு வணிகவரித்துறையில் இந்தாண்டு கூடுதலாக ரூ.20,529 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அதேபோல், பதிவுத்துறையில் கடந்த மாதம் மட்டும் ரூ.1,131 கோடியும், ஏப்ரல் முதல் அக்.31ம் தேதி வரை ரூ.9,727 கோடி ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு பத்திரப்பதிவு துறையில் கூடுதலாக ரூ.2,537 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை ஆகிய இரண்டையும் சேர்ந்து கடந்த ஆண்டைவிட இந்தாண்டு கூடுதலாக ரூ.23,066 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.மேலும், பதிவுத்துறையில் போலி ஆவணங்களை கண்டறிவதற்கும், தவறு செய்பவர்களை தண்டிப்பதற்கும் முதற்கட்டமாக சென்னை, திருநெல்வேலி மற்றும் கோவை மண்டலங்களில் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆய்வின் முடிவில் தவறுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதேபோல், பதிவுத்துறையில் பத்திரங்கள் பதியப்படும் பொழுது ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள் தொடர்ந்து சரி செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் உடனடியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது….

The post வணிகவரி மற்றும் பதிவுத்துறைக்கு ரூ.86,566 கோடி வருவாய் கிடைத்துள்ளது: வருவாய் அதிகரிப்பு என அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tax and Registry ,Chennai ,India ,Minister ,P. Moorthi ,Nandanam, Chennai ,Dinakaran ,
× RELATED ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு