×

குஜராத் தொங்கு பாலம் விபத்தில் 135 பேர் பலியான விவகாரம்!: நீதி விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.. நவ.14ல் விசாரணை..!!

டெல்லி: குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து 135 பேர் பலியான துக்கம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மோர்பி நகரில் சமீபத்தில் சீரமைக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தொங்கு பாலம், கடந்த 30ம் தேதி திடீரென அறுந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட 135 பேர் நீரில் மூழ்கியும், இடிபாடுகளில் சிக்கியும் உயிரிழந்துள்ளனர். இதில் 47 பேர் குழந்தைகள் ஆவர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புனரமைக்கப்பட்ட ஐந்தே நாட்களில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து 135 பேரின் உயிர்களை பழிவாங்கி இருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 3வது நாளாக மச்சு ஆற்றில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. படுகாயம் அடைந்தவர்களை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்திக்கிறார். இந்நிலையில், குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து குறித்த வழக்கை வரும் 14ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பழமைவாய்ந்த பொதுக்கட்டமைப்புகளில் பாதுகாப்பு தணிக்கை நடத்தவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது….

The post குஜராத் தொங்கு பாலம் விபத்தில் 135 பேர் பலியான விவகாரம்!: நீதி விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.. நவ.14ல் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Gujarat suspension bridge accident ,Supreme Court ,Delhi ,Dinakaran ,
× RELATED வாக்காளர் ரகசியம் மீறப்படுவதாக...