×

வித்தியாச சுவையில் பெங்கால் ஸ்வீட்

ராஜ்போக் ரசகுல்லாதேவை:காய்ச்சாத பால்  – அரை லிட்டர்எலுமிச்சைச் சாறு  – ஒன்றரை தேக்கரண்டிதண்ணீர் – ஒன்றே முக்கால் கப்சர்க்கரை – ஒரு கப்குங்குமப்பூ – ஒரு சிட்டிகை (சூடான பாலில் ஊறவைக்கவும்)மஞ்சள் ஃபுட் கலர் –  சில துளிகள்உடைத்த பாதாம், பிஸ்தா – தலா 2 மேசைக்கரண்டி.செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் இறக்கவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பால் திரியும் வரை தொடர்ந்து கிளறவும். இதை மெல்லிய துணியில் ஊற்றி, எலுமிச்சை வாசனை போகும் வரை நன்கு கழுவவும். பிறகு, மூட்டைக் கட்டித் தண்ணீர் முழுவதும் வடியும் வரை தொங்கவிடவும். இதுவே பனீர். அகலமான தட்டில் பனீருடன் மஞ்சள் ஃபுட் கலர் சேர்த்து மிருதுவாகப் பிசையவும். பிசைந்த மாவைச் சிறிய உருண்டைகளாக்கி வடை போல தட்டி, நடுவே நட்ஸ் கலவை வைத்து மூடி மீண்டும் உருட்டவும்.வேறு ஒரு அடிகனமான பாத்திரத்தில் பாலில் ஊறவைத்த குங்குமப்பூ, சர்க்கரை, தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். சர்க்கரைத் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் பனீர் உருண்டைகளைப் போட்டு மூடி 15 நிமிடங்கள் வேகவைக்கவும். நடுநடுவே மெதுவாக உருண்டைகளை உடைத்துவிடாமல் கிளறி இறக்கவும். ராஜ்போக் ரசகுல்லா தயார். பிறகு, இதைக் குளிர வைத்து, சிறிய கோப்பைகளில் சர்க்கரைப்பாகுடன் சேர்த்துப் பரிமாறவும்.குல்கந்து குலாப் ஜாமூன்தேவை:பிரட் – 10 துண்டுகள்குல்கந்து – 50 கிராம்குங்குமப்பூ –  1 சிட்டிகைசர்க்கரை –  1 கப்ஏலக்காய் பொடி – 1 சிட்டிகைஎலுமிச்சைச் சாறு  – 1 தேக்கரண்டிநெய் – 2 தேக்கரண்டிஎண்ணெய் தேவைக்கேற்ப.செய்முறை: ஒரு சூடான வாணலியில் தண்ணீர் ஊற்றி அதனுடன் சர்க்கரையை சேர்க்கவும். பின்பு அதனை நன்றாக கொதிக்கவிட்டு சிறிது நேரம் கழித்து அதில் ஏலக்காய் பொடி, குங்குமப்பூ துளியளவு எலுமிச்சைச் சாறு போன்றவற்றை அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.இப்போது இனிப்பு பாகு தயார்.பிரட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு, அதன் நடுப்பகுதியை மட்டும் பொடி செய்துகொண்டு அதனுடன் பால் சேர்க்கவும். பின்பு அதனை பூரி மாவின் பதத்திற்கு நன்றாக பிசையவும். இப்போது அதனை உருண்டை பிடித்து கொள்ளவும். சுவையான ஜாமூன் உருண்டைகள் தயார். இந்த உருண்டைகளுக்குள் சிறிதளவு குல்கந்து வைத்து மீண்டும் நன்கு உருட்டிக்கொள்ளவும். சூடான எண்ணெய் அல்லது நெய்யில் குல்கந்து உருண்டைகளை பொன்னிறம் வருமளவிற்கு நன்கு பொரிக்கவும். பொன்னிறமாக உருண்டைகள் பொரிந்தபின்பு அதனை இனிப்பு பாகில் அரை மணி நேரம் நன்கு ஊற வைக்கவும். சுவையான குல்கந்து குலோப் ஜாமூன் தயார்….

The post வித்தியாச சுவையில் பெங்கால் ஸ்வீட் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சொல்லிட்டாங்க…