×

கெத்து காட்டி சிக்கிக்கொண்ட இயக்குனர்

சர்ச்சைக்கு பெயர்போனவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. பிரபல நடிகர்களை அடிக்கடி கலாய்த்து அவர்களது ரசிகர்களிடம் மொக்கை வாங்குவார். சில நாட்களாகவே இணைய தள பக்கத்திலிருந்து காணாமல்போனவர் திடீரென்று ஒரு புகைப்படம் வெளியிட்டார். நண்பர் ஓட்டிய டூவீலரில் ட்ரிபிள்ஸ் (மூன்றுபேர்) அமர்ந்து சென்றனர். மூவரில் ஒருவர் வர்மா.

அந்த படத்தை இணைய தள பக்கத்தில் வெளியிட்டு குசும்புத்தனமாக,’நாங்கள் டூவீலரில் டிரிப்பிள்ஸ் செல்கிறோம். எங்கே போலீஸ்?’ என தங்களை போலீசார் யாரும் கண்டு கொள்ளாததுபற்றி கிண்டலாகவும், கெத்துகாட்டியும் மெசேஜ் பகிர்ந்தார். வர்மாவின் இந்த பதிவு அவரது நண்பருக்கு வினையாக வந்து முடிந்தது.

டிரிப்பிள்ஸ் சென்ற டூவீலரின் நம்பரை வைத்து அதன் ஓனருக்கு 1500 ரூபாய் அபராதம் போட்டு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். ஹெல்மெட் அணியவில்லை, விதி மீறி டிரிப்பிள்ஸ்போனது என காரணம் குறிப்பிடப்பட்டிருந்தது. நோட்டீஸ் வாங்கிய டூ வீலர் ஓனர், ‘வேணும்... வேணும்... எனக்கு இதுவும் வேணும்... இன்னமும் வேணும்’ என்று முணுமுணுத்துக் கொண்டிருக்கிறாராம்.

Tags :
× RELATED நடிகர் சித்தார்த் மற்றும் பாலிவுட்...