×

பெண்ணுக்கு 4.2 கிலோவில் ஆண் குழந்தை

பெரம்பூர்: புளியந்தோப்பு ராமசாமி தெருவை சேர்ந்த தம்பதி முகமத் -சம்ரீன் பேகம். நிறைமாத கர்ப்பிணியான சம்ரீன் பேகத்திற்கு பிரசவ வலி ஏற்பட்டதும், நேற்று புளியந்தோப்பு ஆரம்ப சுகாதார மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர் விஜயலட்சுமி பிரசவம் பார்த்தார். அறுவை சிகிச்சையின்றி பிரசவம் பார்க்கப்பட்டது. இதில், 4.2 கிலோ எடையுள்ள அழகிய ஆண் குழந்தை சம்ரீன் பேகத்திற்கு பிறந்தது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இதேபோன்று ஒரு தம்பதிக்கு 4.2 கிலோ எடையுள்ள குழந்தை பிறந்தது. ஆரம்ப சுகாதார மையங்களில் அதிக எடை கொண்ட குழந்தைகள் அறுவை சிகிச்சையின்று பிறப்பது மிகவும் அரிதான ஒன்று. தற்போது அது புளியந்தோப்பு ஆரம்ப சுகாதார மகப்பேறு மையத்தில் நிகழ்ந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்….

The post பெண்ணுக்கு 4.2 கிலோவில் ஆண் குழந்தை appeared first on Dinakaran.

Tags : Perambur ,Mohammad-Samreen Begum ,Puliantoppu Ramasamy Street ,Samreen Begum ,
× RELATED வங்கியிலிருந்து ரிவார்டு...