×

ஏற்காடு தனியார் ஹோட்டலில் விஷம் குடித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி: கணவரை மீட்ட மனைவி

சேலம்: ஏற்காடு தனியார் ஹோட்டலில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் கொண்டலாம்பட்டி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் தர்மராஜ்(28). இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி தமிழரசி. இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஓராண்டிற்கு முன், சேலம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள வெல்லமண்டியில் தர்மராஜ் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே வெல்லமண்டியில் டவுன் பகுதியை சேர்ந்த 20 வயது பெண் வேலை பார்த்துள்ளார். இந்த நிலையில், தர்மராஜூக்கும் அந்த பெண்ணிற்கும்  இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதல் மாறியது. இந்த விவகாரம் இரண்டு குடும்பத்துக்கும் தெரியவந்ததும் அவர்களை பிரித்து வைத்துள்ளனர். இந்த நிலையில், நேற்று மதியம் தர்மராஜ், மனைவி தமிழரசிக்கு போன் செய்து, ‘’தான் ஏற்காடு ரவுண்டானா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் அந்த பெண்ணுடன் வந்து விஷம் குடித்து விட்டேன்’ என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழரசி, தனது உறவினர்களுடன் ஏற்காட்டில் உள்ள தர்மராஜ் தங்கியிருந்த அறைக்கு சென்றபோது இருவரும் மயங்கி கிடந்தனர். அருகில் விஷ மருந்து பாட்டில் கிடந்தது. உடனடியாக அவர்களை மீட்டு, ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தினர்….

The post ஏற்காடு தனியார் ஹோட்டலில் விஷம் குடித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி: கணவரை மீட்ட மனைவி appeared first on Dinakaran.

Tags : Yercaud ,Salem ,Salem Kondolampatti… ,
× RELATED உயிரியல் பூங்கா ஊழியரை முட்டிக்கொன்ற 2...