×

உதவி இயக்குனர் பதவிக்கான தேர்வு இணையதளத்தில் ஹால்டிக்கெட் வெளியீடு டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் அடங்கிய உதவி இயக்குனர் (பெண்கள் மட்டும்) பதவிக்கான எழுத்து தேர்வு (கணினி வழி தேர்வு) வருகிற 5ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் சென்னை, கோவை மதுரை மற்றும் திருச்சி மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் (ஹால்டிக்கெட்) தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.inல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post உதவி இயக்குனர் பதவிக்கான தேர்வு இணையதளத்தில் ஹால்டிக்கெட் வெளியீடு டிஎன்பிஎஸ்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Halticket ,DNBSC ,Chennai ,Control Officer ,Kiran Kurala ,Department of Social Welfare and Women's Rights ,Haltikett ,
× RELATED ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப்...