×

பழுதடைந்த கட்டிடத்தை அகற்றி ராயபுரத்தில் ரூ. 39 கோடி மதிப்பில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு; விரைவில் பணிகள் தொடக்கம்

தண்டையார்பேட்டை: ராயபுரத்தில் பழுதடைந்து கட்டிடங்களை அகற்றி விட்டு ரூ.39 கோடியில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தரப்படும் என்று ஐட்ரீம் மூர்த்தி எம்எல்ஏ தெரிவித்துள்ளார். ராயபுரம் செட்டி தோட்டம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இந்த குடியிருப்பு கட்டிடங்கள் தற்போது பழுதடைந்து காணப்படுகிறது. எனவே, இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிதர அந்த பகுதி மக்கள் ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தியிடம் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோரிடம் ஐட்ரீம் மூர்த்தி எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார். அதன்பேரில், புதிதாக குடியிருப்பு கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்பேரில், நேற்று நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், அங்கு குடியிருப்பவர்கள் தற்காலிகமாக வீட்டை காலி செய்து, வேறு இடத்தில் வாடகைக்கு செல்ல அவர்களுக்கு வாடகை படி நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு தலா ரூ.24 ஆயிரம் காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: ராயபுரம் செட்டி தோட்டம் பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பு கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இக்கட்டிடம் தலா 200 சதுர அடியில் 3 மாடி வீடுகளாக இருந்தது. தற்போது, இக்கட்டிடம் பழுது காரணமாக இடித்து விட்டு புதிதாக ரூ.39 கோடி மத்திப்பில், தலா 430 சதுர அடியில், 243 வீடுகள் கொண்ட 9 மாடி கட்டிடம், பார்கிங் வசதியுடன் கட்டப்பட உள்ளது. இந்த பணிகள் 18 மாதங்களில் முடிக்கப்படும். அதுவரை இந்த குடியிருப்பு வாசிகள் வாடகைக்கு தங்குவதற்கு ரூ.24 ஆயிரம் செக் வழங்கப்பட்டது. மேலும் தற்காலிக ஆணையும் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி செந்தில்முருகன், ராயபுரம் பகுதி செயலாளர் வ.பே.சுரேஷ், திமுகவினர் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்….

The post பழுதடைந்த கட்டிடத்தை அகற்றி ராயபுரத்தில் ரூ. 39 கோடி மதிப்பில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு; விரைவில் பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Rayapuram ,Thandaiyarpet ,IDream ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் ரயில் நிலையத்தில் விரைவு...