×

வீட்டில் புதைக்கப்பட்ட பெண் சிசு சடலம் தோண்டி எடுப்பு; போலீசார் விசாரணை

புழல்: செங்குன்றம் பகுதியில் வீட்டில் புதைக்கப்பட்ட பெண் சிசு சடலத்தை போலீசார் தோண்டி எடுத்து, விசாரித்து வருகின்றனர். புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (60). அவரது மகன் மாரி (28), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பவானி (25). இவர்களுக்கு  இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மாரி, தனது குடும்பத்துடன் செங்குன்றம் அடுத்த கிராண்ட்லைன் பெரியார் தெருவில் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான பவானிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னை ஆர்எஸ்ஆர்எம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்து, சில மணி நேரத்தில் இறந்தது. இதையடுத்து, வீட்டிற்கு வந்த மாரியும், பவானியும் வீட்டின் உள்ளே அந்த பெண் சிசுவை பள்ளம் தோண்டி புதைத்தனர். இதுகுறித்து, அப்பகுதியினர் கிராம நிர்வாக அதிகாரி சேகருக்கு தகவல் தெரிவித்தனர்.  உடனே அவர் செங்குன்றம் போலீசார் மற்றும் பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் ஆகியோருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், வீட்டினுள் கோணி பையில் வைத்து புதைக்கப்பட்ட பெண் சிசு சடலத்தை தோண்டி எடுத்து, அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் புதைத்தனர். மேலும்,  இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post வீட்டில் புதைக்கப்பட்ட பெண் சிசு சடலம் தோண்டி எடுப்பு; போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Chengunram ,Puzhal Kavankarai ,Dinakaran ,
× RELATED புழல் பகுதியில் பயனற்ற மாநகராட்சி...