கல்யாண ராசி பார்க்கும் ஹீரோயின்கள்

திருமணம் எப்போது என்றாலே பல ஹீரோயின்கள் குறைந்தது 3 வருடம் ஆகும் என்று ரெடியான ஒரு பதிலை வைத்திருப்பார்கள். சமந்தா நாக சைதன்யா திருமணத் துக்கு பிறகு ஒரு சில நடிகைகள் திருமண ராசி பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். திருமணம் ஆன பிறகு சமந்தா தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போடுகிறார். திருமணம் ஆகி விவாகரத்து ஆன அமலாபாலும் தற்போது படங்களில் பிஸி ஹீரோயினாக இருக்கிறார். வஞ்சகர் உலகம், செவன் படங்களில் நடித்திருப்பவர் அனிஷா அம்புரோஸ்.

தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும் எதிர்பார்த்தளவுக்கு வாய்ப்பு வராமல் முடங்கிக்கிடக்கிறார். திருமண ராசி படங்களை பெற்றுத்தரும் என்று நம்பிக்கொண்டிருக்கும் அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளும் முடிவிலிருக்கிறாராம். கடந்த 2 நாட்களாக வாலிபர் ஒருவருடன் அனிஷாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடப்பதுபோல் ஒரு புகைப்படம் நெட்டில் உலா வருகிறது. இதுபற்றி அனிஷாவிடம் கேட்டால் பதில் எதுவும் கூறாமல் மவுனம் காக்கிறார்.

Tags : Heroines ,
× RELATED திருமண யோகம் தரும் தீப்பாய்ந்த நாச்சியார்