சட்டை கழற்றிய ஆட்டத்தில் ஷ்ரத்தா மயக்கம்

முதல் படத்தின் டிரெய்லர், டீஸரே பிச்சிகிட்டு லைக்ஸை அள்ளிக்குவித்தால் எந்த ஹீரோயினுக்குத்தான் குஷியிருக்காது? ஷ்ரத்தா கபூர் டபுளை கடந்து டிரிப்பிள் குஷியில் இருக்கிறார். பிரபாஸ் ஜோடியாக சாஹோ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் ஷ்ரத்தா. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் உருவாகும் இப்படத்தின் டிரெய்லர், டீஸர் வெளியாகி ஜெட் வேகத்தில் பரவத் தொடங்கியது.

4 மொழிகளிலும் சேர்த்து இதுவரை 6 கோடி பேர்களுக்கு மேல் பார்த்திருக்கின்றனர். இதையறிந்த ஷ்ரத்தா மகிழ்ச்சியில் பூரித்திருக்கிறார். ‘பட குழுவினரின் 2 வருடத்துக்கு மேலான கடின உழைப்பில் சாஹோ உருவாகியிருக்கிறது.

இப்படத்தின் டீஸர், டிரெய்லருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை கண்டு ஆனந்தத்தில் மிதந்துகொண்டிருக்கிறேன். நன்றி நன்றி நன்றி’ என ஒன்றுக்கு மூன்று முறை ரசிகர்களுக்கு நன்றி சொல்லயிருக்கிறார் ஷ்ரத்தா. அத்துடன் சாஹோ படத்தின் டிரெய்லர் தியேட்டரில் திரையிடும் போது ரசிகர்கள் சட்டையை கழற்றிவிட்டு ஆட்டம் போட்ட வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Tags : Shruta ,match ,
× RELATED வேப்பலோடையில் வட்டார விளையாட்டு போட்டி