×

அச்சச்சோ... மருத்துவமனை படுக்கையில் சினேகா

மருத்துவமனையில் படுத்த படுக்கையிலிருக்கிறார் சினேகா.....! அட நம்ம சினேகாவா இப்படி ஆயிட்டாரு?னு பதற வேண்டாம். இவர் டோலிவுட், பாலிவுட் ஹீரோயின் சினேகா உள்ளால்.  மருத்துவமனையில் படுக்கையிலிருக்கும் புகைப்படங்களை அவரே வெளியிட்டிருக்கிறார்.
‘என் வாழ்க்கையில் முதமுறையா  ஆஸ்பத்ரிலே படுத்தபடுக்கையா  கெடக்கேன். கடும் ஜுரம் என்னை இப்படி ஆக்கிடுச்சி. பல டாக்டர்கள் சிகிச்சை அளிக்கிறாங்க.... வெவ்வேற டெஸ்ட் எடுத்ததுல  ‘ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர்’னு கண்டுபிடிச்சாங்க.

நெறய மருந்து சாப்ட்றேன்.  உடம்பு வலி தாங்க முடியல. பயமா இருக்கு. ரொம்பவே சீரியஸா இருந்த நெலம இப்ப கொஞ்சம் மாறியிருக்கு. அப்பக்கூட ஸ்டெடியா எந்திரிச்சி உட்கார முடியல. ரொம்பவே போர் அடிக்குது. செல்போன்ல்ல வர படங்கள் பாத்துதான் பொழுத கழிக்கறேன். எப்ப ஷூட்டிங்குக்கு போவலாம்னு காத்துகிட்டிருக்கேன். உங்க ஹெல்த்த ஜாக்கிரதையா பாத்துக்கங்க..’ என்று கூறியிருக்கிறார் சினேகா உள்ளால்.

Tags : Sneha ,
× RELATED இடப்பிரச்னையில் பெண்ணை தாக்கியவர் கைது