×

90ஸ் நடிகர் நடிகைகள் கோவாவில் பார்ட்டி

சென்னை: 1990 காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த சினிமா பிரபலங்கள் கோவாவில் நடைபெற்ற சந்திப்பில் ஒன்றிணைந்துள்ளனர். இயக்குனர்கள் முதல் நடிகர்கள் வரை இந்த மறு சந்திப்பில் கலந்துக்கொண்டுள்ளனர். தங்களின் நினைவுகள் மற்றும் நெகிழ்ச்சியான தருணங்களை அப்போது பகிர்ந்துக்கொண்டனர். இயக்குநர்களான கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், லிங்குசாமி, மோகன் ராஜா, பிரபு தேவா ஆகியோர் இடம்பெற்றனர். நடிகர்களான ஜெகபதி பாபு, மேகா ஸ்ரீகாந்த் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். 90-களில் தமிழ் சினிமாவில் கலக்கிய முன்னணி நாயகிகளான சிம்ரன், மீனா, சங்கவி, மாளவிகா, சங்கீதா, ரீமா சென், மகேஸ்வரி மற்றும் சிவரஞ்சனி ஆகியோரும் இணைந்து விழாவை மேலும் மிளிரச் செய்துள்ளனர். கோவாவில் பல்வேறு இடங்களுக்கு இவர்கள் சுற்றுலா சென்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags : Goa ,Chennai ,K.S. Ravikumar ,
× RELATED ‘ரெட்ட தல’க்கு நன்றி சொன்ன சித்தி இத்னானி