×

இஎஸ்ஐ மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக ரூ.59 லட்சம் மோசடி; தம்பதி கைது

கோவை: கோவை சிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் தன்யா (39). இவரது கணவர் கருணாநிதி (45). தன்யா கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றுவதாக கூறி அங்கு நர்சு, மருத்துவ உதவியாளர்கள், உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. பணம் தந்தால் வேலை வாங்கி தருகிறேன் எனக்கூறியுள்ளார். இதை நம்பி பணத்தை பறிகொடுத்த சூலூர் பகுதியை சேர்ந்த நுபைல் (22) மற்றும் முருகன், சரவணக்குமார் உள்ளிட்டோர் கோவை மாநகர போலீசில் புகார் அளித்தனர். ஒவ்வொரு நபரிடமும் ரூ.3 லட்சம் முதல் 6 லட்சம் வரை இவர்கள் வாங்கியிருப்பதாக தெரிகிறது. சிலரிடம் ஒரிஜினல் கல்வி சான்று வாங்கிய தன்யா, போலி நியமன ஆணை வழங்கியதாக தெரிகிறது. பணம் கொடுத்து ஏமாந்த சிலர் பணத்தையும், சான்றிதழ்களையும் திரும்ப கேட்டனர். இதனால் தன்யா, அவரது கணவருடன் தப்பி சென்று விட்டார். புகாரின்படி கோவை மாநகர குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் இவர்களை தேடி வந்தனர். இவர்கள் கோவை நகரில் 10க்கும் மேற்பட்ேடாரிடம் ரூ.59 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில், நேற்று கேரள மாநிலம் கண்ணனூர் பஸ் ஸ்டாண்டில் இருந்த போது தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து இருவரையும் கைது செய்தனர். இவர்களிடம் தமிழகம் முழுவதும் பலர் பணத்தை இழந்து விட்டதாக கூறப்படுகிறது. இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்….

The post இஎஸ்ஐ மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக ரூ.59 லட்சம் மோசடி; தம்பதி கைது appeared first on Dinakaran.

Tags : ESI ,Govai ,Tanya ,Singhanalur ,Karunaniti ,Tanya Koki ,E. ,S.S. ,Dinakaran ,
× RELATED வாரிசு சான்றிதழ் பெற மே 12க்குள் விண்ணப்பிக்கலாம்: இஎஸ்ஐ தகவல்