திரிஷாவின் புதிய காதலன் யார்?

திரையுலகுக்கு வந்து 15 வருடம் ஆகிவிட்டாலும் இன்னமும் பன்னீரில் நனைந்த மலரைப்போலவே புத்தம் புதுசாக பளிச்சிடுகிறார் திரிஷா. விஜய்சேதுபதியுடன் நடித்த 96 படத்துக்கு பிறகு மீண்டும் அவரது மார்க்கெட் நிமிர்ந்திருக்கிறது. 96 படம் மூலம் தன்னை புதுப்பித்துக்கொண்ட திரிஷா தற்போது தனது காதலையும் புதுப்பித்திருக்கிறார்.

ஏற்கனவே நடிகர் ராணாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி பின்னர் பட அதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்து திடீரென்று அந்த நிச்சயதார்த்தை கேன்சல் செய்துவிட்டு சிங்கிள் ஆனார்.

வருடங்கள் உருண்டோடிய நிலையிலும் தான் இன்னமும் சிங்கள்தான் என்று கூறி வந்தார் திரிஷா. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர், ‘உங்கள் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என்ன?’ என்று கேட்டதற்கு, ‘சிங்கிள் பட் டேக்கன்’ என பதில் அளித்து மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக மறைமுகமாக பதில் அளித்திருக்கிறார்.

அதேசமயம் திருமணம் பற்றி கேட்டதற்கு, ‘தேவையென்றால் திருமணம் செய்யலாம் ஆனால் அதுவொரு தேவை கிடையாது’ என குழப்பியிருக்கிறார். மீண்டும் காதலில் விழுந்திருப்பதை குறிப்பால் திரிஷா உணர்த்தியதையடுத்து அவரது புதிய காதலன் யார் என்பதை கோலிவுட் கண்கள் பூதக்கண்ணாடி வைத்துக்கொண்டு தேடி வருகின்றன.

Related Stories:

>