×

இந்த வருடம் நடிப்புக்கு லீவு விட்ட ஷாருக்கான்

கடைசியாக நடித்த ஜீரோ படம் சரியாக போகாததால் அப்செட்டில் இருக்கிறார் ஷாருக்கான். ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்ட சாரே ஜஹான் ஸே அச்சா படத்திலிருந்தும் விலகினார். சென்னைக்கு வந்தபோது டைரக்டர் அட்லியை சந்தித்து கதை கேட்டார். ஆனால் அதிலும் ஷாருக்கான் திருப்தி அடையவில்லை என கூறப்படுகிறது.

மேலும் சில டைரக்டர்களிடம் கதை கேட்டிருந்தாலும் தற்போதைக்கு தனக்கு பக்கா மாஸ் வெற்றி தேவை என காத்திருக்கிறார் ஷாருக்கான். இதனால் இந்த ஆண்டு முழுவதும் நடிப்புக்கு லீவு போட்டுக்கொண்டு குடும்பத்தாருடன் விடுமுறையை கொண்டாட முடிவு செய்திருக்கிறாராம். அதே சமயம், அவ்வப்போது சில இயக்குனர்களிடம் கதைகள் கேட்கவும் நேரம் ஒதுக்கியிருக்கிறாராம்.

Tags : Shahrukhan ,
× RELATED நடிகர் ஷாருக்கான் மகன் தொடர்பான போதை...