×

கன்னி மாடம் படத்தில் சென்னை வாழ்க்கை

குணச்சித்திர நடிகர் போஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படம், கன்னி மாடம். இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த பிப்ரவரி 18ம் தேதி தொடங்கி, மே 16ம் தேதி படப்பிடிப்பை முடித்தோம். மெட்ராஸ் என்றால் என்ன என்பதை இப்படம் சொல்லும். வாழ்க்கையில் ஏதாவது  சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னைக்கு வரும் இளைஞர்களும், மற்றவர்களும் மேட்டுக்குப்பம், விஜயராகவபுரம், சூளைமேடு ஆகிய பகுதிகளில்  தங்குவார்கள்.

அப்போது அவர்கள் எதிர்பாராமல் எதிர்கொள்ளும் பிரச்னைகளை  மையமாக வைத்து கதை எழுதியுள்ளேன். ஹரி சாய் இசையில் உருவான எல்லா பாடல்களும் மான்டேஜ் முறையில் படமாக்கப்பட்டுள்ளது. ஆட்டோ ரிக்‌ஷா  டிரைவர்கள் பற்றிய பாடலை ரோபோ சங்கர் பாடியுள்ளார். ஸ்ரீராம், காயத்ரி, ஆடுகளம் முருகதாஸ் நடித்துள்ளனர்.

Tags : Chennai ,
× RELATED என் வாழ்க்கை பயணம் உங்களுக்கு...