×

பல பல்கலைகளின் கீழ் இயங்கிய 27 உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம்: கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவிப்பு

சென்னை: பல்வேறு பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கி வந்த 27 உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்வதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இது குறித்து நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பல்வேறு பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கி வந்த 27 உறுப்பு கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்படுகிறது. 27 கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு அக்டோபர் 2022ம் மாதத்திற்கான ஊதியம் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலங்கள் வாயிலாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.மேலும், கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ள உறுப்பு கல்லூரிகளில் பணியாற்றிய இணை பேராசிரியர்கள் 27 பேருக்கு முதல்வராக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. 27 அரசு கலைக்கல்லூரிகளிலும் உள்ள பணியாளர்கள் ஊதியத்தை அரசு கருவூலத்தில் இருந்து பெற்று வழங்க வேண்டும். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள இணைப்பேராசிரியர்கள் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட கல்லூரியில் பணியில் சேர வேண்டும். பணியில் சேர்ந்தவுடன் அந்தந்த மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரை நேரில் சந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகள் பெற்று அதன்படி செயல்பட வேண்டும். அதேபோல், கல்லூரி முழுமையான அரசு கல்லூரியாக செயல்படுவதற்கு தேவையான அனைத்து  நடவடிக்கையும் மிகுந்த பொறுப்புணர்வோடு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post பல பல்கலைகளின் கீழ் இயங்கிய 27 உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம்: கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Directorate of Collegiate Education ,Chennai ,Directorate of College Education ,Dinakaran ,
× RELATED கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு