×

ரூ.48 கோடி செலவில் மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் கட்டிய விடுதி, நூலக கட்டிடம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.48 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள விடுதி கட்டிடங்கள் மற்றும் நூலக கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மதுரை அரசு மருத்துவ கல்லூரியில், 288 முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்கும் வகையில் தரை மற்றும் 3 தளங்களுடன், ரூ.12.27 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 144 அறைகளுடன் கூடுதல் விடுதி கட்டிடம், 174 இளநிலை மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்கள் தங்கும் வகையில் ரூ.8.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 174 அறைகளுடன் கூடுதல் விடுதி கட்டப்பட்டுள்ளது. இதேபோன்று, 204 மருத்துவ படிப்பு மாணவிகள் தங்கும் வகையில், ரூ.9.38 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 68 அறைகளுடன் கூடுதல் விடுதி மற்றும் 132 மருத்துவ படிப்பு பயிலும் மாணவிகள் தங்கும் வகையில் ரூ.9.12 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 44 அறைகளைக் கொண்ட கூடுதல் விடுதி கட்டப்பட்டுள்ளது. மேலும், மதுரை மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவகள் பயன்பெறும் வகையில் ரூ.8.62 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நூலக கட்டடம் என ஒட்டுமொத்தமாக ரூ.48 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளது. இவற்றை சென்னை தலைமைச்செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், மருத்துவ கல்வி கூடுதல் இயக்குநர் மருத்துவர் சுகந்தி கலந்து கொண்டனர். மதுரையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக அமைச்சர் பி.மூர்த்தி, சு.வெங்கடேசன் எம்.பி மற்றும் எம்எல்ஏக்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்….

The post ரூ.48 கோடி செலவில் மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் கட்டிய விடுதி, நூலக கட்டிடம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Madurai Government Medical College ,Chief Minister B.C. G.K. Stalin ,Chennai ,Chief Minister ,State ,Department ,of ,Library Building ,B.C. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்