×

சமந்தா பட விவகாரம் : இயக்குனருடன் தயாரிப்பாளர் மோதல்

ஓ பேபி எந்த சக்ககுன்னவே தெலுங்கு படத்தில் சமந்தா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் பாட்டி, பேத்தி என இரண்டு வேடங்களை சமந்தா ஏற்றுள்ளார். கொரிய படமொன்றின் ரீமேக்காக இந்த படம் உருவாகியுள்ளது. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார்.

சமீபத்தில் படமான சில காட்சிகளை பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ், சமந்தா சம்பந்தப்பட்ட சில காட்சிகளை ரீஷூட் செய்யும்படி கூறியதாகவும் இதனால் டைரக்டர் நந்தினிக்கும் தயாரிப்பாளருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில். ‘பட காட்சிகள் அனைத்தும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. இதில் ரீஷூட் என்ற பேச்சுக்கே இடமில்லை. சமந்தா சிறப்பாக நடித்திருக்கிறார்’ என்றார் நந்தினி.

Tags : Samantha ,
× RELATED சமந்தா வெளியிட்ட நிர்வாண போட்டோ: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி