×

காதல் வலையில் பிரியா வாரியர்?

கண் சிமிட்டல் மூலம் இணையதளங்கள் வாயிலாக உலகம் முழுக்க பிரபலமானவர், பிரியா பிரகாஷ் வாரியர். மலையாளம் மற்றும் தமிழில் வெளியான ஒரு அடார் லவ் படத்தில், இளம் நடிகர் ரோ‌ஷன் ஜோடியாக நடித்தார். தற்போது இந்தியில் நடித்து வரும் பிரியா, ரோஷனை காதலிப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பிரியா கூறுகையில், ‘திரையுலகில் தினந்தோறும் பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது.

அதில் இதுவும் ஒன்று. சினிமாவின் இன்னொரு அங்கமாக வதந்திகள் இணைந்து விட்டது. உண்மையே இல்லாத தகவலுக்கு ஆயுள் கிடையாது. அது பொய் என்று ஒருநாள் தெரியும். நான் யாரையும் காதலிக்கவில்லை. என் கவனம் முழுவதும் நடிப்பில் மட்டுமே இருக்கிறது.

ரோஷனும், நானும் ஒரே படத்தில் இணைந்து நடித்ததால், அவர் எனக்கு நல்ல நண்பராக இருக்கிறார். மற்றபடி அவரை நானும், என்னை அவரும் காதலிக்கவில்லை. நாங்கள் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்று, எங்களை புதுப்படத்தில் ஒப்பந்தம் செய்ய வருபவர்கள் கேட்கிறார் கள். அதை வைத்து இந்த வதந்தி பரவியிருக்கும் என்று நினைக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

Tags : Priya Warrior ,
× RELATED இயற்கையை பாதுகாத்தால் மட்டுமே...