×

பாக். எல்லையில் சிக்கிய மர்ம கழுகு: ராணுவம் விசாரணை

ஜெய்சால்மர: ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தானில் இருந்து சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த கழுகு சிக்கியது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள  பாகிஸ்தான் எல்லையில் எல்லை பாதுகாப்பு படையினர் (பிஎஸ்எப்) நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, லோங்கேவாலா என்ற இடத்தில் கழுகு ஒன்று இந்திய எல்லைக்குள் வந்தது. அதன் காலில் வளையம் பொருத்தப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த வீரர்கள் அந்த பறவையை லாவகமாக பிடித்தனர்.  பாகிஸ்தான் அடிக்கடி இந்தியாவுக்குகள் டிரோன்களை அனுப்பி உளவு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அவ்வாறு வந்த டிரோன்களை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். தற்போது பாகிஸ்தானில் இருந்து காலில் வளையம் பொருத்தப்பட்ட கழுகு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  எல்லையில் டிரோன்கள் வந்தால் இந்திய வீரர்கள் அதை விரட்டி அடிக்கின்றனர் அல்லது சுட்டு வீழ்த்துகின்றனர். எனவே, உளவு தகவல்களை அனுப்புதற்காக கழுகுகளை பாகிஸ்தான் உளவுத்துறையோ அல்லது தீவிரவாதிகளோ பயன்படுத்தக் கூடும் என சந்தேகிப்பதால், இந்த பறவையின் வருகை குறித்து விசாரணை நடத்தப்படுகிறது….

The post பாக். எல்லையில் சிக்கிய மர்ம கழுகு: ராணுவம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Bach ,JAISALMARA ,Pakistan ,Rajasthan ,Rajasthan, Jaisalmer District ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்...