×

சாலையில் அங்கும் இங்குமாக போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகளை திரியவிட்டால் அபராதம்- வழக்கு பதிவு: ஆரணி நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

ஆரணி: ஆரணி நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-ஆரணி நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகள் மற்றும் ஆரணி டவுன் பகுதிகளில் நாளுக்கு நாள் மாடுகள் தொல்லை அதிகரித்துள்ளதால் சாலைகளில் மாடுகள் குறுக்கும் நெடுக்கமாக செல்வதால்,  அவ்வழியாக கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு விபத்துகள் ஏற்பட்டு காயங்களுடனும், அச்சத்துடனும் சென்று வருகின்றனர். இதுகுறித்து நகரமன்ற உறுப்பினர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து நகராட்சி அலுவலகத்திற்கு வந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால், மாடுகளால் ஏற்படும் விபத்துகள், இடையூறுகளை  கட்டுப்படுத்த மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது, வளாகத்திற்குள் மட்டும் வைத்து பராமரித்து வர வேண்டும். பொது இடங்களில் திரியவிட்டால் நகராட்சி பணியாளர்கள் மூலம் பிடித்து அப்புறப்படுத்துவதுடன், அதற்கான செலவுத் தொகையுடன் சேர்த்து அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து, காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, மாடுகளை வளர்ப்போர்கள் தங்களது வளர்ப்பு மாடுகளை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள பொது இடங்களில்  மீறி மாடுகளை திரியவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்….

The post சாலையில் அங்கும் இங்குமாக போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகளை திரியவிட்டால் அபராதம்- வழக்கு பதிவு: ஆரணி நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Arani Municipal ,Commissioner ,Arani ,Tamilchelvi ,Arani Municipality ,Town ,
× RELATED தமிழகம் முழுவதும் விதிகளை மீறிய 1,054...