கதய லவுட்டிட்டாங்க...! ‘பீலா’ பார்த்திபன்

விஷால் நடித்துள்ள ‘அயோக்யா’ படம் ரிலீஸ், பிரச்னையால் தடைபட்டது.  இப்படத்தில் பார்த்திபனும் நடித்திருக்கிறார். கடைசி நேர பிரச்னையால் அயோக்யா வெளியீடு தள்ளிப்போனதுபற்றி குறிப்பிட்ட பார்த்திபன், இது அயோக்கியத்தனம். இதனால் தயாரிப்பாளர் மற்றும் நாயகனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு அளவே இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார் பார்த்திபன். இந்நிலையில் பிரச்னைகளை தாண்டி படம் வெளியானது.

படத்தை பார்த்த பார்த்திபன் ஷாக் ஆகி மற்றொரு டுவிட் வெளியிட்டிருக்கிறார். அதில், ‘அயோக்கியா’த்தனம்! 94-ல் வெளியான என், ஜினல் ஜினல் ஒரிஜினல், ‘உள்ளே வெளியே’ படத்தை இன் அண்ட் அவுட் லவுட்டி டெம்பர் (ரைட்ஸ் பெறாமல்) தெலுங்கில் ஹிட்டாக்கி தமிழிலும் தற்போது! அதில் என்னையும் நடிக்க வைத்தது என்ன ஒரு ‘அ-தனம்’? குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி?

வழக்கு செய்யாமல், பெருமையுடன் பதிவிடுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். இதுபற்றி பார்த்திபனிடம் பலரும் தொடர்பு கொண்டு கேட்டவுடன் ஜர்க் அடித்தார். அயோக்யா பற்றி நான் சொன்னது ஒரு விளம்பர யுக்தி. எனக்கும் விஷாலுக்கும் எந்த பிரச்னையும் இல்லை, வழக்கம்போல எனது குறும்பை காட்டினேன் என்று தான் ‘பீலா’ விட்டதையும் டுவிட் செய்திருக்கிறார்.

Related Stories:

>