×

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் கலந்தாய்வில் சிறப்பு பிரிவில் 65 பேருக்கு ஒதுக்கீடு ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

சென்னை: 2022-23ம் ஆண்டின் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பு சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான ஒதுக்கீடு ஆணையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்பில் தரவரிசை பட்டியல் அடிப்படையில் நேற்று முதல் சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்க வளாகத்தில் நடந்தது. இதில் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களிடம் இருந்து 2,695 விண்ணப்பங்களும், விளையாட்டு பிரிவில் 216 விண்ணப்பங்களும், முன்னாள்  ராணுவ வீரர்களின் வாரிசுகளிடம் இருந்து 356 விண்ணப்பங்களும் பெறப்பட்டது. நேற்று சிறப்பு பிரிவினருக்கான ஒதுக்கீட்டில், மாற்று திறனாளிகள் பிரிவில் 46 பேருக்கும், முன்னால் ராணுவ வீரர்களின் வாரிசுகள் பிரிவில் 11 பேருக்கும், விளையாட்டு பிரிவில் 8 பேருக்கும் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாணவர்களுக்கு வழங்கினார். இன்றைய தினம் 7.5 சதவிகித அரசு பள்ளி மாணவர்களுக்காண கலந்தாய்வு நடைபெறவுள்ளது….

The post எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் கலந்தாய்வில் சிறப்பு பிரிவில் 65 பேருக்கு ஒதுக்கீடு ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma. Subramanian ,Chennai ,TD ,Ma. Supramanian ,Dinakaran ,
× RELATED சில செயற்கை கருத்தரித்தல் மையங்கள்...