×

கோ ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு அமலில் உள்ள பணிக்கொடை, நலநிதி திட்டம் தொடரும்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக கோஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கோ ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு  பணிக்கொடை மற்றும் நல நிதிகள் வழங்குவது  1-7-1979ம் தேதி முதல்  அமல் செய்யப்பட்டது.  ஆனால்  பணிக்கொடை வழங்குதல் சட்டம்(1972)-ன்  சில விதிகள் 1979ம் ஆண்டு அமலான கோ ஆப்டெக்ஸ் பணிக்கொடை மற்றும் நல நிதிகள் வழங்கும் திட்டத்துக்கு எதிராக  உள்ளதையும், அதை தெளிவுபடுத்துமாறும் கைத்துறி ஆணையர் மூலமாக  அரசின் கவனத்துக்கு ஜூன் மாதம் கொண்டுச் சென்றோம். தமிழக அரசும் அதனை கவனமாக பரிசீலத்து  கோ ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கான பணிக்கொடை மற்றும் நலநிதி திட்டங்கள், 1972ம் ஆண்டு பணிக்கொடை வழங்குதல் சட்டத்துக்கு மாறாக இல்லை என்று தெளிவுப்படுத்தி உள்ளது. எனவே    கோ ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு வழங்கப்படும்  பணிக்கொடை மற்றும் நலநிதி திட்டம் தொடரலாம் என்று  தெரிவித்துள்ளது. அதன்படி எல்லா மண்டலங்களுக்கும் தெரிவிப்பது , ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பணிக்கொடை மற்றும் நலநிதி திட்டம் தொடரும். கூடவே 2022ம் ஆண்டு  மே மாதத்துக்கு பிறகு  ஓய்வு பெற்ற ஊழியர்கள், விருப்ப ஒய்வு பெற்றவர்களுக்கும் பணிக்கொடைக்கான வட்டித் தொகையை தரவும்.   கூடவே சம்பந்தப்பட்ட  ஊழியர்கள் வருமான வரி செலுத்துபவர்களாக இருந்தால், அவர்களிடம் பிடிக்க வேண்டிய வருமானவரி விகிதங்கள் பிடித்தம் செய்வதையும், அதை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்புவதையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த  சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post கோ ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு அமலில் உள்ள பணிக்கொடை, நலநிதி திட்டம் தொடரும்: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Co Optex ,Tamil Nadu ,Govt. ,Chennai ,Managing Director ,Tamil Nadu Co-Optex ,Co-Optex ,
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...