×

விஸ்வாசம் ரீமேக்கில் சிவராஜ்குமார்

அஜித், நயன்தாரா நடித்த விஸ்வாசம் படம், கன்னடத்தில் டப்பிங் ஆகி வெளியிடப்பட்டது. இந்நிலையில் அந்த படத்தின் ரீமேக் உரிமையும் கன்னடத்தில் வாங்கப்பட்டுள்ளது. இதில் சிவராஜ்குமார் நடிப்பார் என கூறப்படுகிறது. இது பற்றி சிவராஜ்குமார் கூறும்போது, ‘விஸ்வாசம் படத்தை பார்த்தேன். அஜித் சிறப்பாக நடித்திருந்தார்.

பேமிலி ஆடியன்சுக்கும் ஆக்‌ஷன் பிரியர்களுக்கும் பிடிக்கும் வகையில் இந்த படம் இருந்தது. இதில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது’ என்றார். அஜித் வேடத்தில் சிவராஜ்குமாரும் நயன்தாரா வேடத்தில் முன்னணி நடிகை ஒருவரும் இதில் நடிக்கலாம் என தெரிகிறது.

Tags : Sivaraj Kumar ,Vishwamam ,
× RELATED பொங்கலுக்கு 3 தமிழ் படங்கள் ரிலீஸ்